Affiliation Number: 1930830
ISO 9001:2015 Certified

விஜயதசமி கொண்டாட்டம்.


 

நம் பள்ளியில் ஆறாம் ஆண்டு விஜயதசமிக்கான கடவுள் பொம்மைகளை பள்ளி குழந்தைகள் அனைவரும் கொண்டு வந்தனர். ஒன்பது படிகளில் ஒவ்வொரு படிகளுக்கு ஏற்ப ஆறறிவு முதல் ஓரறிவு வரை உள்ள அனைத்து பொம்மைகளையும் அலங்கரித்தனர் நம் பள்ளி ஆசிரியர்கள்.
ராமனாய் வந்து தோன்றி இராவணன் தன்னை வீட்டித்
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானுமாகப்
பராபரமாகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதியாகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரெ 
என்ற கம்பனின் சொல்லிற்கு ஏற்ப இடதுபுறம் இராமனின் பட்டாபிஷேகம் காட்சி, அயோத்தி காட்சி, இராவணின் முன், இராமனின் சிறந்த பக்தன் என்பதை நிருபிக்க தனது வாலையே சிம்மாசனமாக மாற்றி அமர்ந்த காட்சி இது போல் இராமாயணத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகள் அழகாக காட்சிக்கு வைத்திருந்தனர்.
குற்றங்கள் சொல்ல ஆயிரம் கரணங்கள் இருக்கலாம்….!
ஆனால் மறக்கவும் ….. மன்னிக்கவும்…….
ஒரே காரணம் தான்……!
அது தான் அன்பு …….!
அன்பு மட்டும் தான் …….!
லீலைகள் மூலம் அன்பைக் காட்டும் விதமாக வலதுபுறம் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணனின் பிறப்பு, வெண்ணெய் எடுத்து மகிழ்ந்த காட்சி, கன்னியர்களுடன் விளையாடியக் காட்சி போன்றவைகளை கடவுள் பொம்மைகளை வைத்து அலங்கரித்தனர். மேலும் பள்ளி அலுவலகத்தின் வலது புறத்தில் சிவபெருமான் கைலாயத்தில் உள்ள காட்சிகள் வெகு சிறப்பாக அலங்கரித்தனர் . எங்கள் பள்ளி மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களோடு வந்து கடவுளை துதித்து ஆசிபெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *